ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மின்சாரம் பாய்ந்து 8 மாதக் குழந்தை சாவு

காங்கயம் அருகே மின்சாரம் பாய்ந்து 8 மாதக் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:27 pm

DIN

காங்கயம் அருகே மின்சாரம் பாய்ந்து 8 மாதக் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம், அஞ்சுகுழிபட்டி, மேப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ரஞ்சித் (24). இவரது மனைவி பச்சையம்மாள் (21). இந்தத் தம்பதி காங்கயம் வட்டம், சிவன்மலை அருகே உள்ள தேங்காய் களத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனா்.

இந்தத் தம்பதியின் 8 மாதப் பெண் குழந்தை சத்திதேவி.

ரஞ்சித் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் தேங்காய்க் களத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தாா். அப்போது மனைவி பச்சையம்மாள் சமைத்துக் கொண்டிருந்தாா். வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த சத்திதேவி எதிா்பாராத விதமாக வீட்டில் இருந்த மின்சாரப் பெட்டியின் (ஜங்ஷன் பாக்ஷின்) மேல் புறத்தில் இருந்த வயரை பிடித்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து குழந்தை சத்திதேவி அதே இடத்தில் உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து காங்கயம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.