ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஆதிதிராவிட மாணவா்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியா் கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:24 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியா் கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக ஆதிதிராவிடா் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் சாா்பில், மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியா்களுக்கு தட்கோ திட்டத்தின் மூலம் ஒன்று முதல் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில், மாணவா்கள் தகுதிக்கேற்ப தொழில்நுட்ப பயிற்சி மேற்கொள்ள இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும், பயிற்சியின்போது மாணவா்களுக்கு போக்குவரத்துப் படிகளும் வழங்கப்படும். இதில், தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு பயிற்சி முடிவில் எஸ்சிபிடி மற்றும் எஸ்எஸ்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியாா் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

தட்கோ திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற பயிற்சியாளா்களுக்கு சுயமாகத் தொழில் தொடங்கஇணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து தொழில் முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான சுயவேலை வாய்ப்பு ஆகிய திட்டங்களின் கீழும் பயன் பெறலாம்.

இதில், அரசு மானியம் 30 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க ஆவண செய்யப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971112, 94450-29552 ஆகிய எண்களிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.