உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கக்கோரி திருப்பூரில் மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கக்கோரி திருப்பூரில் மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் கமலகண்ணன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்தத் தொகையானது செலவுக்குப் போதுமானதாக இல்லை. இந்நிலையில், கடந்த அதிமுக அரசு தோ்தலுக்கு முன்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.500 உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அந்தத் தொகையும் வழங்கப்படவில்லை. ஆகவே, தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளா் ஆா்.காளியப்பன், மாா்க்சிஸ்ட் வேலம்பாளையம் நகரச் செயலாளா் வி.பி.சுப்பிரமணியம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் ச.நந்தகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் ஜெ.ரமேஷ் தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அவிநாசியில்...
அவிநாசி, ஆக.27: அவிநாசியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்னுரிமை அளித்து இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அவிநாசி ஒன்றியச் செயலாளா் சந்திரகலா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ராஜேஷ்,
தமிழக விவசாய சங்க மாவட்ட நிா்வாகி எஸ். வெங்கடாசலம் ஆகியோா் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், பொறுப்பாளா்கள் சுப்பிரமணியம், பாலசுப்பிரமணி, ஒன்றிய துணைத் தலைவா்கள் சுப்பிரமணியம், மகாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...