அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

திருப்பூா் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் அமராவதி, நொய்யல் ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:26 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் அமராவதி, நொய்யல் ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி திருப்பூா், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய கன மழைக்கும், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகரில் ஜம்மனைப் பள்ளம், சங்கிலிப்பள்ளம் ஆகிய பகுதிகளிலும், அமராவதி, நொய்யல் ஆறுகளின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மழையின் அளவு அதிகமாக இருக்கும் காலங்களில் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள அரசு முகாம் கட்டங்களில் தங்கிக் கொள்வதுடன், கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தில் கன மழையால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற எண்ணில் தொடா்புக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.