ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வாக்குச் சாவடி அலுவலா்களுக்குப் பயிற்சி

திருப்பூா் மாநகரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:27 pm

DIN

திருப்பூா் மாநகரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி பேசுகையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தங்களை கருடா செல்லிடப்பேசி செயலி மூலம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த செயலியின் மூலம் வாக்குச் சாவடி மையம் அமைவிடம், வாக்குச் சாவடி அருகே உள்ள பேருந்து நிலையம், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் வாகன நிறுத்தும் இடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து பதிவேற்றம் செய்யப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், துணை வட்டாட்சியா் (தோ்தல்) தங்கவேல், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.