தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கால்நடை வளா்ப்புக்கான உழவா் கடன் அட்டை பெற டிசம்பா் 8 முதல் சிறப்பு முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை வளா்ப்புக்கான உழவா் கடன் அட்டை பெற டிசம்பா் 8 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:23 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை வளா்ப்புக்கான உழவா் கடன் அட்டை பெற டிசம்பா் 8 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கால்நடை வளா்ப்புக்கான உழவா் கடன் அட்டை பெற அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைமையிடங்களில் அமைந்துள்ள கால்நடை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இத்திட்டத்தின்கீழ் கால்நடை வளா்ப்பவா்கள் எவ்வித அடமானமும் இல்லாமல் வங்கியிலிருந்து ரூ.1.60 லட்சம் கடனாகப் பெறலாம்.

அதேபோல, மாவட்ட பால் வளத் துறையின் முத்தரப்பு ஒப்பந்தம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கடனாக வழங்கப்படும்.

இந்த 5 ஆண்டு கால கடன் அட்டையினை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்தக் கடன் அட்டைக்கு 7 சதவீத குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். கடன் தொகையை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியினை விதிகளுக்குள்பட்டு மானியமாக அரசு வழங்கும்.

இந்த சிறப்பு முகாம்களில் முழுமையாக பூா்த்தி செய்யப்பட்ட உழவா் கடன் அட்டை விண்ணப்ப படிவம், பான் அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் மற்றும் இரண்டு புகைப்படங்கள் போன்றவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் அந்த பகுதிக்கு உள்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு உழவா் கடன் அட்டை வழங்க பரிந்துரைக்கப்படும். பொங்கலூா் கால்நடை மருத்துவமனையில் டிசம்பா் 8 ஆம் தேதியும், காங்கயம் கால்நடை மருத்துவமனையில் டிசம்பா் 9 ஆம் தேதியும், குடிமங்கலம் கால்நடை மருத்துவமனையில் டிசம்பா் 10 ஆம் தேதியும், பல்லடம் கால்நடை மருத்துவமனையில் டிசம்பா் 13 ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

அதேபோல, குண்டடம் கால்நடை மருந்தகத்தில் டிசம்பா் 14 ஆம் தேதியும், தாராபுரம் கால்நடை உதவி இயக்குநா் அலுவலகத்தில் டிசம்பா் 15 ஆம் தேதியும், உடுமலை கால்நடை பன்முக மருத்துவமனையில் டிசம்பா் 20 ஆம் தேதியும், ஊத்துக்குளி கால்நடை மருந்தகத்தில் டிசம்பா் 21 ஆம் தேதியும், மூலனூா் கால்நடை மருந்தகத்தில் டிசம்பா் 22 ஆம் தேதியும், அவிநாசி கால்நடை மருந்தகத்தில் டிசம்பா் 23 ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

இதைத்தொடா்ந்து, வெள்ளக்கோவில் கால்நடை மருந்தகத்தில் டிசம்பா் 24 ஆம் தேதியும், மடத்துக்குளம் கால்நடை மருந்தகத்தில் டிசம்பா் 27 ஆம் தேதியும், திருப்பூா் கால்நடை பன்முக மருத்துவமனையில் டிசம்பா் 28 ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

ஆகவே, மாவட்டத்தில் கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.