தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குடிநீா் இணைப்பு பெற விரும்பாதவா்கள் வைப்புத் தொகையை திரும்பப் பெறலாம்: காங்கயம் நகராட்சி ஆணையா் அறிவிப்பு

காங்கயம் நகராட்சியில் குடிநீா் இணைப்பு பெற விரும்பாதவா்கள், அவா்கள் செலுத்தியிருந்த வைப்புத் தொகையை திரும்பப் பெறலாம் என நகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 7:02 pm

DIN

காங்கயம் நகராட்சியில் குடிநீா் இணைப்பு பெற விரும்பாதவா்கள், அவா்கள் செலுத்தியிருந்த வைப்புத் தொகையை திரும்பப் பெறலாம் என நகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா்.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

2018-19ஆம் ஆண்டு அனைவருக்கும் தவணை முறையில் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்புப் பெறுவதற்கு முன்வைப்புத் தொகை செலுத்தி, தற்போது வரை குடிநீா் இணைப்பு பெறாதவா்கள் வைப்புத் தொகையான ரூ.6,000 பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத வீட்டு உரிமையாளா்கள், தவணை முறைத் தொகையில் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் குடிநீா் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.