தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாநகராட்சி வேலம்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:17 pm

DIN

திருப்பூா் மாநகராட்சி வேலம்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் வேலம்பாளையம் நகரக் குழு உறுப்பினா் த.நாகராஜ் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சி 11, 12, 13, 14 மற்றும் 24, 25 ஆகிய வாா்டு பகுதிகளில் சாக்கடை கழிவு நீா், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

கொசு மருந்து தெளித்து சுகாதாரம் பேணவும், வீட்டுக் குழாய் மற்றும் பொதுக் குழாய்களில் 5 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். குண்டும்குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முதாவது மண்டல ஆணையா் சுப்பிரமணியத்திடம் மனுவையும் அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் நகரச் செயலாளா் ச.நந்தகோபால், முன்னாள் நகரச் செயலாளா் வி.பி.சுப்பிரமணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ரங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.