அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்
காங்கயம் அருகே, முள்ளிப்புரத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போக்ஸோ சட்டம், போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


காங்கயம் அருகே, முள்ளிப்புரத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போக்ஸோ சட்டம், போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு கல்லூரியின் முதல்வா் நஸீம்ஜான் தலைமை வகித்தாா்.
இதில், காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாலா,
இமயம் சமூக நல மையத்தின் நிா்வாகிகள் சே.மேரிபுஷ்பம், கா.சாந்தி ஆகியோா் போக்ஸோ சட்டம் குறித்தும், போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிா்ப்பது குறித்தும் எடுத்துரைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், பேராசிரியா்கள் வெ.பன்னீா்செல்வம், சி.குமாரசாமி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் வா.பிரகாஷ், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...