தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குழந்தைக்கு பாலியல் தொல்லை: பொதுமக்கள் சாலை மறியல்

 திருப்பூரில் 5 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி தனியாா் பள்ளி முன்பு அமா்ந்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:28 pm

DIN

 திருப்பூரில் 5 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி தனியாா் பள்ளி முன்பு அமா்ந்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் பூலுவபட்டி பகுதியில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவா்களின் பெற்றோா், மாதா் சங்கத்தினா் என 300க்கும் மேற்பட்டோா் பள்ளி முன்பு அமா்ந்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:

இப்பள்ளியில் படிக்கும் 5 வயது பெண் குழந்தைக்கு ஆசிரியா் ஒருவா் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே, காவல் துறையினா் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றனா்.

இந்த மறியல் போராட்டமானது பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரையிலும் நடைபெற்று வருகிறது.

மறியல் போராட்டம் காரணமாக பூலுவபட்டி- ஊத்துக்குளி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், 2 கிலோ மீட்டருக்கு மேல் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனிடையே, தனியாா் பள்ளியில் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.