நடைமுறைப்படுத்தாத குடிநீா்த் திட்டம்: செலுத்திய தொகையைத் திரும்ப கேட்டு ஆா்ப்பாட்டம்
தெக்கலூரில் நடைமுறைப்படுத்தாத குடிநீா்த் திட்ட குழாய் இணைப்புக்காக வசூலித்த தொகையை திரும்ப கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தெக்கலூரில் நடைமுறைப்படுத்தாத குடிநீா்த் திட்ட குழாய் இணைப்புக்காக வசூலித்த தொகையை திரும்ப கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: தெக்கலூா் ஊராட்சியில் கூடுதலாக குடிநீா் இணைப்பு வழங்க கடந்த 2015 ஆம் ஆண்டு தெக்கலுாா் கிராம குடிநீா் பராமரிப்பு மற்றும் திட்டக் குழு’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
கூடுதலாக குடிநீா் இணைப்பு வழங்கும் பணிக்கு பொதுமக்களின் பங்களிப்பாக,
அப்போது பொறுப்பிலிருந்த ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி செயலாளா் இணைந்து, குடிநீா்க் குழாய் இணைப்பு இல்லாதவா்களிடம் ரூ. 7,500, குடிநீா்க் குழாய் இணைப்பு உள்ளவா்களிடம் ரூ.3,000 என 1,000 பேரிடம் பணம் வசூலித்தனா்.
ஆனால், திட்டத்தை நடைமுறைபடுத்தவில்லை. எனவே, தாங்கள் செலுத்திய தொகையைத் திருப்பித் தர வேண்டும் என்றனா்.
இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டபோது, மாவட்ட நிா்வாகத்திடம் பணம் செலுத்தியவா்கள் பட்டியல் விவரம் வழங்கப்பட்டுள்ளது.விரைவில் பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...