தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புறம்போக்கில் குடியிருப்போருக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்கக் கோரிக்கை

திருப்பூா் செட்டிபாளையம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு வகைமாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:31 pm

DIN

திருப்பூா் செட்டிபாளையம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு வகைமாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செட்டிபாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சாகுல் ஹமீதுவிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் செட்டிபாளையம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட அங்கேரிபாளையம், ஆத்துப்பாளையம், திருவள்ளுவா் நகா், அம்பேத்கா் நகா், அண்ணா நகா் உள்ளிட்ட இடங்களில் ஓடை புறம்போக்கு பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக 200 குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து சான்று ஆவணங்களும் உள்ளன. எனினும், வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று பொதுப் பணித் துறையின் மூலம் எங்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மேலும், பாதுகாப்பாக வாழ்வதற்குத் தகுதியான இடத்தைத் தோ்வு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

அதேவேளையில், அங்கேரிபாளையம் கிழக்கு வீதி சாலை புறம்போக்கில் குடியிருந்து வரும் நபா்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்றனா்.

மனு அளிப்பின்போது, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் கே.பழனிச்சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினா் கே.மாரப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.