போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டு சிறை
திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.


திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
திருப்பூா் ஆண்டிபாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் பி.கிருஷ்ணசாமி (61).
இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
இது குறித்து திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா்,
கிருஷ்ணசாமியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து மாவட்ட நீதிபதி வி.பி.சுகந்தி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணசாமிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...