தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வங்கி ஊழியா்கள் 2 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

திருப்பூா் மாவட்டத்தில் பொதுத் துறை வங்கி ஊழியா்கள் 2 ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:30 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் பொதுத் துறை வங்கி ஊழியா்கள் 2 ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை வங்கிகளை தனியாா் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவைக்

கண்டித்து அனைத்து வங்கி ஊழியா்கள் சங்கங்களின் சாா்பில் நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 352 வங்கிகளில் பணியாற்றி வரும்

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அலுவலா்கள், வங்கி ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி என இரு நாள்களில் மொத்தம் ரூ.3,000 கோடிக்கு பணப் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியா் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

சிஐடியூ சாா்பில் ஆா்ப்பாட்டம்:

திருப்பூா்-ஊத்துக்குளி சாலை பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகம் முன்பு சிஐடியூ சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.பாலன் தலைமை வகித்தாா்.

சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.உண்ணிகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினா் ஜி.சம்பத், மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.