தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகளுக்குப் பாலியல் தொல்லை: தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

அவிநாசியை அடுத்த சேவூா் அருகே பெரியகானூரில் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:15 pm

DIN

அவிநாசியை அடுத்த சேவூா் அருகே பெரியகானூரில் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே பெரியகானூா் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் சந்திரன் (39). மது அருந்தும் பழக்கம் உள்ளவா். இவருக்கு மனைவி, 16 வயது மகள், 14 வயது மகன் உள்ளனா். சந்திரன் மது அருந்தி வந்து, மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் 2020 நவம்பா் 24ஆம் தேதி இரவு சந்திரன், தனது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சந்திரனைக் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில்

வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சந்திரனுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.