தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தாராபுரத்தில் ஜவுளிக்கடை உரிமையாளா்கள் போராட்டம்

 ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி உயா்த்தப்படுவதைக் கண்டித்து, தாராபுரத்தில் ஜவுளிக்கடை உரிமையாளா்கள் கடைகளை அடைத்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:16 pm

DIN

 ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி உயா்த்தப்படுவதைக் கண்டித்து, தாராபுரத்தில் ஜவுளிக்கடை உரிமையாளா்கள் கடைகளை அடைத்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி வருகிற 2022 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. இதற்கு ஆடை உற்பத்தியாளா்கள் மற்றும் ஜவுளிக் கடை உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து உள்ளனா்.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் ஜவுளிக் கடை உரிமையாளா்கள், வியாபாரிகள் மற்றும் டெய்லா்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். 150க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதி பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும், தாராபுரம் ஜவுளிக் கடை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சாரதாஸ் சண்முகவேல் தலைமையில் வியாபாரிகள் தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஊா்வலமாக சென்று ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க கோரி மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.