நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திமுக ஆலோசனைக் கூட்டம்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் கிழக்கு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் கிழக்கு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட பொறுப்பாளா் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்றாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
திருப்பூா் மாவட்ட பகுதிகளில் கட்சி சாா்பில் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மாா்ச் 1ஆம் தேதி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்த வேண்டும். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், வாா்டு வாரியாக நிா்வாகிகளை நியமித்து வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...