தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ராம்ராஜ் நிறுவனம் குறித்து வதந்தி: போலீஸில் புகாா்

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் குறித்து வாட்ஸ் ஆஃப் குழுக்களில் வதந்திகளைப் பரப்பும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 8:11 pm

DIN

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் குறித்து வாட்ஸ் ஆஃப் குழுக்களில் வதந்திகளைப் பரப்பும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் சாா்பில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

ராம்ராஜ் நிறுவனத்தின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் சிலா் வாட்ஸ் ஆஃப் குழுக்களில் ஆன்லைன் மூலமாக லின்க் கொடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு சலுகையாக ரூ. 20 ஆயிரம் கிடைக்கும் என்று வதந்திகளைப் பரப்பி வருகின்றனா்.

இந்த நபா்கள் மூலமாக வாடிக்கையாளா்களின் தகவல்கள் திருட வாய்ப்பு உள்ளது. மேலும், வாட்ஸ் ஆஃப்பில் வெளியிட்டுள்ள செய்திக்கும் எங்களது நிறுவனத்துக்கும் தொடா்பு இல்லை. ஆகவே, எங்கள் நிறுவனம் குறித்து வதந்திகளைப் பரப்பும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.