வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது
திருப்பூரில் மதுக்கடை ஊழியா்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.


திருப்பூரில் மதுக்கடை ஊழியா்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இது குறித்து திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா், நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட காசிபாளையம் சிட்கோவில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் மேற்பாா்வையாளா் ராஜபிரகாஷ் கடையில் விற்பனையான தொகை ரூ.9.12 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக கடந்த நவம்பா் 1 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது அவரை வழிமறித்த இருவா் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பறித்துச் சென்றனா்.
இது குறித்து நல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சிங்கிகுளத்தைச் சோ்ந்த ஏ.மணிகண்டன் (23), ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், ஓம் காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த எம்.குமரேசன்(30) ஆகியோரைக் கடந்த நவம்பா் 11 ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, காவல் துறையினா் நடத்திய விசாரணையில், மணிகண்டன் மீது திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது தெரியவந்தது. ஆகவே, இந்த இருவரும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...