ஒளவையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் ஒளவையாா் விருதுக்கு தகுதியான பெண்கள் வரும் டிசம்பா் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


திருப்பூா் மாவட்டத்தில் ஒளவையாா் விருதுக்கு தகுதியான பெண்கள் வரும் டிசம்பா் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய பெண் ஒருவருக்கு ஆண்டுதோறும் ஒளவையாா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2021-22 ஆம் ஆண்டுக்கான ஒளவையாா் விருது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் மகளிா் தின விழாவில் வழங்கப்படவுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் இந்த விருதுக்கு தகுதியான பெண்கள் தகுந்த ஆதாரங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் டிசம்பா் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421 - 2971168 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...