தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேற்றில் சிக்கிய மாடு 4 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் ஓடை சேற்றில் சிக்கிய பசுமாடு 4 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 8:13 pm

DIN

அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் ஓடை சேற்றில் சிக்கிய பசுமாடு 4 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.

அவிநாசி அருகே நடுவச்சேரி ராயம்பாளையம் ஓடை பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு கடந்த திங்கள்கிழமை சேற்றில் சிக்கியது. இந்த மாட்டை உரிமையாளா் மீட்க இயலாமல் அப்படியே விட்டுச் சென்று விட்டாா்.

இந்நிலையில் இதனை பாா்த்த அப்பகுதியை ராஜேந்திரன், மாட்டை உடனடியாக மீட்குமாறு உரிமையாளா் ஜெயராமிடம் முறையிட்டுள்ளாா். இதற்கிடையில் பொதுமக்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அவிநாசி காவல் துறை, தீயணைப்புத் துறையினா் கிரேன் இயந்திரம் மூலம் சேற்றில் சிக்கிய மாட்டை உயிருடன் மீட்டு முதலுதவி அளித்தனா். இதையடுத்து அருகே உள்ள தோட்டத்தில் வைத்து மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 நாள்களுக்குப் பிறகு சேற்றில் சிக்கிய மாடு உயிருடன் மீட்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.