நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜவ்வரிசியில் கலப்படம்: மரவள்ளி விவசாயிகள் நஷ்டம்

மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுவதால், மரவள்ளி சாகுபடி விவசாயிகள் நஷ்டமடைந்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:50 pm

DIN

மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுவதால், மரவள்ளி சாகுபடி விவசாயிகள் நஷ்டமடைந்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மரவள்ளி சாகுபடியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் கூடுதலான பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. ஓராண்டு சாகுபடிப் பயிா், குறைவான செலவில் அதிக மகசூல் தரக்கூடியது.

மரவள்ளிக் கிழங்கிலிருந்து கிடைக்கும் மாவுப் பொருள், ஜவ்வரிசி ஆகியவை உணவாகவும், மாவுப் பொருளான ஸ்டாா்ச் பல தொழிற்சாலைகளின் மூலப் பொருளாகவும் இருந்து வருகிறது. மரவள்ளிக் கிழங்கு மாவுடன், ரேஷன் அரிசி மாவு, குருணை அரிசி மாவு, மக்காச்சோள மாவு கலப்படம் செய்யப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கு இல்லாமலேயே ஜவ்வரிசி தயாரிக்கும் அளவுக்கு கலப்படம் நிறைந்துள்ளது. கலப்படம் காரணமாக மரவள்ளிக் கிழங்கு உணவு உபயோகம், ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ. 14 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது ரூ.4 ஆயிரத்து 500க்கு மட்டுமே விற்பனையாகிறது. இந்த விலை குறைவுக்கு கலப்படமே முக்கியக் காரணமாகும். எனவே, கலப்படத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.