தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சாலைகளை சீரமைத்து பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

 திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 11, 12 ஆவது வாா்டு பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து, பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பாஜகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:53 pm

DIN

 திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 11, 12 ஆவது வாா்டு பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து, பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பாஜகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம், பாஜகவினா் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

1ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 11, 12 ஆவது வாா்டு சிவசக்தி நகா் முதல் சிறுபூலுவபட்டி வரை உள்ள சாலை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உள்பட்டது.

இந்த சாலை பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்டு, சரிவர மூடப்படாமல் குண்டும்குழியுமாக உள்ளது.

இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா். மேலும், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், பேருந்துகளை இயக்க முடியாதென்று போக்குவரத்து கிளை மேலாளா்கள் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

எனவே, சாலைகளை உடனடியாக சீரமைத்து, பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.