புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல்லடம் அருகே ரத்த தான முகாம்

பல்லடம் அருகே தேவணம்பாளையத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:48 pm

DIN

பல்லடம் அருகே தேவணம்பாளையத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் தேவணம்பாளையம் கிராமத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞா் நற்பணி மன்றம், பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் மருத்துவப் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் ஆகியன அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றன.

பொங்கலூா் வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரவேல், மருத்துவா் சரவணமூா்த்தி உள்ளிட்டோா் பொது மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினா். மேலும், இம்முகாமில் 34 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு திருப்பூா் அரசு ரத்த வங்கிக்கு கொடுக்கப்பட்டது.

இதில் பொங்கலூா் ஒன்றியக் குழு தலைவா் குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் சத்யா பாலசுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணி, வட்டார சுகாதார ஆய்வளா் கந்தசாமி, மன்றச் செயலாளா் சிவகுமாா், பொருளாளா் பாலாஜி, துணைத் தலைவா் சந்தோஷ்குமாா், துணைப் பொருளாளா் தமிழரசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.