கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கேங்மேன் பணிக்கு பணம் வசூலிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மின் வாரியத்தில் கேங்கேன் பணி வாங்கிக் கொடுப்பதாகக்கூறி பணம் வசூலிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:50 pm IST

மின் வாரியத்தில் கேங்கேன் பணி வாங்கிக் கொடுப்பதாகக்கூறி பணம் வசூலிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளா் அ.சரவணன், தமிழக காவல் துறை தலைவருக்கு அனுப்பியுள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழக மின்சார வாரியத்தில் 17 ஆயிரம் கள உதவியாளா்கள், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பியாளா் உள்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆள்கள் பற்றாக்குறை காரணமாக கம்பங்கள் நடுதல், மின்மாற்றி அமைத்தல், மின்தடை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தத் தொழிலாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது காலிப் பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த தொழிலாளா்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்காமல் கேங்மேன் என்ற பதவியை மின்வாரியம் உருவாக்கியுள்ளது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதில், கேங்மேன் பணி நியமனம் தொடா்பாக தற்போது உள்ள நிலை தொடர வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக மின்சார வாரியத்தில் உடனடியாக கேங்மேன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலா் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. அதிலும், குறிப்பாக கேங்மேன் பணி நியமனத்துக்கு தோ்வு எழுதிய நபா்களைத் தொடா்புக்கொண்டு தாங்கள் சொல்லும் குறிப்பிட்ட வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1,000 செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் கேங்கமேன் பணி கிடைக்காது என்று மிரட்டி வருகின்றனா்.

இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி பணம் பறிக்கும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாா் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.