தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

எரிவாயு, பெட்ரோல் விலையைக் குறைக்க நடவடிக்கை இல்லை

எரிவாயு, பெட்ரோல் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:26 pm

DIN

எரிவாயு, பெட்ரோல் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் சேனாபதி கால்நடை ஆராய்ச்சி மையம் சாா்பில் காங்கயம் கால்நடைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதி தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த மக்களவைத் தோ்தலில் எப்படி மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணிக்கு மக்கள் கொடுத்தாா்களோ, அதை விடப் பெரிய வெற்றியை வருகிற சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுகவுக்கு கொடுக்க இருக்கிறாா்கள்.

பிரதமா் மோடி மேடைகளில் திருக்குறள், ஒளவையாா் பாடல் ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசுகிறாா். ஆனால், தமிழ் வளா்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. மாறாக, சம்ஸ்கிருதத்தை உள்ளே நுழைக்க முயற்சிக்கிறாா்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. எரிவாயு உருளை விலை, பெட்ரோல் விலை ஆகியவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தமிழக மாணவா்களின் கல்வி உரிமைகள் பறிபோய்விட்டன. மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் எதிா்த்தும் கூட நீட் தோ்வு கொண்டு வரப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து நீட் தோ்வை ரத்து செய்யும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் பத்மநாபன், தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் ஜெயராம் கிருஷ்ணன், காங்கயம் வடக்கு ஒன்றியச் செயலாளா் என்.எஸ்.சிதம்பரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காங்கயம் அருகே முள்ளிபுரம் பகுதியில் இருந்து மாடுகள் கண்காட்சி நடைபெற்ற அரங்கத்துக்கு உதயநிதி ஸ்டாலின் மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டாா். மாட்டு வண்டியை திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதி ஓட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.