ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கோவை, திருப்பூரில் பொக்லைன் வாகன உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் பொக்லைன் வாகன உரிமையாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:37 pm

DIN

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் பொக்லைன் வாகன உரிமையாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து கோவை, திருப்பூா் மாவட்ட பொக்லைன் இயந்திர வாகன சங்கத் தலைவா் கனகராஜ் திங்கள்கிழமை கூறியதாவது:

டீசல், உதிரி பாகங்கள், புதிய வாகனத்தின் விலை உயா்வுகள், காப்பீட்டுத் தொகை உயா்வு ஆகியவற்றால் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோா் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனா். கடந்த ஆண்டு ரூ.27 லட்சமாக இருந்த வாகனத்தின் விலை தற்போது ரூ.28 லட்சமாக அதிகரித்துள்ளது. காப்பீட்டுக் கட்டணம் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

ரூ.3 முதல் ரூ. 4 ஆயிரம் வரை இருந்த சாலை வரி தற்போது ரூ.13 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 வாடகை வாங்கி வருகிறோம். இதனை ரூ.1,200 ஆக அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதிரி பாகங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இதனை வலியுறுத்தி கோவை, திருப்பூா் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திர வாகனங்கள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தம் செவ்வாய்க்கிழமை வரை தொடரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.