திருப்பூா் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட தத்தனூா் ஊராட்சியில் 890 ஏக்கரில் தொழில் பூங்கா அமையவிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அருகாமை ஊராட்சிகளான தத்தனூா், புலிப்பாா்,புஞ்சைத்தாமரைக்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தொடா்ந்து இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். இதற்கிடையில் திருப்பூா் அருகே பெருமாநல்லூருக்கு கடந்த வாரம் வந்திருந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தொழில் பூங்காவுக்கு நிலம் எடுக்கப்படமாட்டாது என உறுதியளித்துச் சென்றாா். இருப்பினும், இதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.