வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் சாவு

குண்டடம் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:25 pm

DIN

குண்டடம் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து குண்டடம் காவல் துறையினா் கூறியதாவது:

தாராபுரத்தை அடுத்துள்ள புலியவலசைச் சோ்ந்தவா் எஸ்.வினித் (19). இவா் தாராபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கம்பி கட்டும் வேலைக்குச் சென்று வந்தாா்.

இந்நிலையில், வினித் தனது இருசக்கர வாகனத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உப்பாறு அணைப் பகுதி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது பூசணிக்காய் ஏற்றிக் கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் வினித்தின் இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வினித் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.