பெட்ரோல் கேனுடன் பீடி பற்றவைத்தவா் பலி
திருப்பூா் அருகே பெட்ரோல் கேனுடன் பீடி பற்றவைத்தபோது தீப்பிடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.


திருப்பூா் அருகே பெட்ரோல் கேனுடன் பீடி பற்றவைத்தபோது தீப்பிடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பூா் ஊரக காவல் துறையினா் கூறியதாவது:
திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எலக்ட்ரானிக் கடை அருகே ஆண் சடலம் கருகிய நிலையில் கிடப்பதாகப் பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூா் ஊரக காவல் துறையினா் உடல் கருகிய நிலையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனா். அதில், அப்பகுதியில் நின்றிருந்த ஆண் ஒருவா் பெட்ரோல் கேனுடன் பீடி பற்றவைத்தபோது தீப்பிடித்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. எனினும், அவா் யாா், எந்த ஊா் என்பது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...