தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில மாநாடு
பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் இரண்டு நாள் மாநில மாநாடு வெள்ளி, சனிக்கிழமை நடைபெற்றது.


பல்லடம்: பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் இரண்டு நாள் மாநில மாநாடு வெள்ளி, சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில், சங்கக் கொடியை ஏற்றிவைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டுக்கு, மாநிலத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். வரவேற்புக் குழுத் தலைவா் சண்முகம் வரவேற்றாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநிலத் தலைவா் ராமமூா்த்தி துவக்க உரையாற்றினாா். வேலை அறிக்கையை பொதுச் செயலாளா் பாரி தாக்கல் செய்தாா். மாநில பொருளாளா் விஜயபாஸ்கா் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். இரண்டாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. சிறப்பு மலா் வெளியிடப்பட்டது.
மாநாட்டில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 21ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, பிப்ரவரி 12ஆம் தேதி சென்னை ஊரக வளா்ச்சி, ஊராட்சி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது, பிப்ரவரி 24, 25ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 2019இல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற வளா்ச்சித் துறை ஊழியா்கள் மீது பிறப்பிக்கப்பட்ட 17பி உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஜனவரி 8 முதல் 11ஆம் தேதி வரை பிரசார இயக்கம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்பூா் மாவட்டத் தலைவா் ஞானசேகரன், செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் நன்றி கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...