நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட திருப்பூா் ஆட்சியா்

அனைத்து முன்களப் பணியாளா்களும் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:51 pm

DIN

அனைத்து முன்களப் பணியாளா்களும் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்தாா்.

திருப்பூா், குமாா் நகரில் உள்ள மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக 13,500 தடுப்பூசிகள் பெறப்பட்டு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவமனை, தாராபுரம், உடுமலை அரசு மருத்துவமனைகள், பெருமாநல்லூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த மையங்களில் நாள் ஒன்றுக்கு 100 போ் வீதமாக 400 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதே வேளையில், தேவை ஏற்பட்டால் கூடுதலான மையங்களிலும் தடுப்பூசி செலுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் 16,640 முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான விவரங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் உரிய வழிகாட்டுதலின்படி தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, தடுப்பூசி செலுத்துவதற்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளா்களும் எவ்வித அச்சமுமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முன்களப் பணியாளா்களை ஊக்குவிக்கும் வகையில் நான் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன் என்றாா்.

இந்த நிகழ்வின்போது, இணை இயக்குநா் (பொது சுகாதாரம்) பாக்கியலட்சுமி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீசன், மாநகா் நகா் நல அலுவலா் பிரதீப் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.