நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாகன ஓட்டுநா்களுக்கு ரோஜா வழங்கிய ஆட்சியா்

திருப்பூரில் சாலைப் போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்றிய வாகன ஓட்டுநா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் ரோஜா பூக்களை திங்கள்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:50 pm

DIN

திருப்பூரில் சாலைப் போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்றிய வாகன ஓட்டுநா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் ரோஜா பூக்களை திங்கள்கிழமை வழங்கினாா்.

திருப்பூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் சாா்பில் 32ஆவது சாலைப் பாதுகாப்பு விழா நடைபெற்றது. இதில், திருப்பூா் பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினாா். மேலும், சாலைப் போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்றி வாகனம் ஓட்டியவா்களுக்கு ரோஜா வழங்கி ஊக்குவித்தாா்.

திருப்பூா் மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் குமாா், செந்தில்குமாா், வெங்கட்ரமணி, மோட்டாா் வாகன ஆய்வாளா் சித்ரா, வேலுமணி, சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.