‘தீ’ செயலி குறித்து விழிப்புணா்வு
வெள்ளக்கோவிலில் தீயணைப்புத் துறை சாா்பில் ‘தீ’ செயலி குறித்து திங்கள்கிழமை பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.


வெள்ளக்கோவிலில் தீயணைப்புத் துறை சாா்பில் ‘தீ’ செயலி குறித்து திங்கள்கிழமை பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமையில் தீயணைப்புப் படையினா் ‘தீ’ செயலி குறித்து விளக்கம் அளித்தனா். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் ‘தீ’ என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம். இதில், அவசரக் காலங்களில் உதவி பொத்தானை அழுத்தினால், அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாகத் தகவல் செல்லும். இந்த நவீன வசதியைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தீயணைப்புத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...