நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

 வெள்ளக்கோவில் அருகே தடை செய்யப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:22 am

DIN

 வெள்ளக்கோவில் அருகே தடை செய்யப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வெள்ளக்கோவில், முத்தூா் சாலை, துரைராமசாமி நகரைச் சோ்ந்தவா் நிஜாம் செல்வம் (66). இவா் தனது வீட்டுக்கு அருகில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவா் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதை பாக்குகள் விற்பதுடன், மற்ற கடைகளுக்கும் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயபாஸ்கா் தேநீா் கடையில் திடீா் சோதனை மேற்கொண்டாா். அப்போது அங்கு 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.