நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காா் மோதியதில் 2 மின் கம்பங்கள் சேதம்

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் 2 மின் கம்பங்கள் வியாழக்கிழமை சேதமடைந்தன.

News image
Updated On :15 ஜூலை 2021, 8:08 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் 2 மின் கம்பங்கள் வியாழக்கிழமை சேதமடைந்தன.

வெள்ளக்கோவில் மூலனூா் பிரிவு அருகே சாலையோரத்தில் இரும்பினாலான மின் கம்பங்கள் உள்ளன. இந்நிலையில் அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு காா் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் வியாழக்கிழமை மோதியது. இதில் இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தன.

இதில் மின்சாரம் தானாகவே துண்டிக்கப்பட்டதால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. மேலும் சாலையில் விழுந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.