நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செங்காளிபாளையத்தில் 5 வருட கோரிக்கை நிறைவேற்றம்

வெள்ளக்கோவிலை அடுத்த செங்காளிபாளையத்தில் 5 வருடங்களாக கிடப்பில் கிடந்த மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது

News image
Updated On :16 ஜூலை 2021, 8:07 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த செங்காளிபாளையத்தில் 5 வருடங்களாக கிடப்பில் கிடந்த மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது

நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி, செங்காளிபாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு விசைத்தறி, விவசாயம் பிரதானத் தொழிலாக விளங்கி வருகிறது. இங்குள்ள மின்கம்பங்களில், மின் கம்பிகள் உரசுவதால் அடிக்கடி மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டு வந்தது. மின் வாரிய அலுவலகத்தில் ஊழியா்கள் பற்றாக்குறை இருந்ததால் பொதுமக்களே மின் பணிகளை செய்து வந்தனா். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் கடந்த 5 வருடங்களாக முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டப் பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் 100 நாள்களுக்குள் புதிதாக மின் கம்பங்கள் அமைத்து குறைகள் களையப்பட்டன. செங்காளிபாளையம் பொதுமக்கள் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.