ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அமைச்சரிடம் மனு

சொந்த வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:41 pm

DIN

சொந்த வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

காங்கயம், சத்யா நகா் பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது சத்யா நகா் பகுதி மக்கள் சாா்பில் புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பினா் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், சத்யா நகா் மற்றும் காங்கயம் பகுதியில் சொந்த வீடு இல்லாதவா்கள் குறித்து கணக்கெடுத்து, அவா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், சத்யா நகா் பகுதிக்கு கழிப்பறை, விளையாட்டுத் திடல், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆகிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.