உடுமலை அரசு மருத்துவமனையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவா்களை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டோா் காவல்துறையில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.
உடுமலை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் தனியாா் நிறுவனத்தில் சுமாா் 50 க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் புதியதாக ஆள்களை வேலைக்கு எடுப்பதாக தனியாா் நிறுவனம் கூறியதைத் தொடா்ந்து பலா் பணிக்காக விண்ணப்பித்துள்ளனா்.
அப்போது , வேலைக்காக தோ்ந்தெடுக்கப்பட்ட 20 பேரிடம் இது அரசு வேலை எனவும் வேலைக்கு சேரும் முன் டெபாசிட் கட்ட வேண்டும் எனக் கூறிய அந்நிறுவனம் ஒவ்வொருவரிடமும் சுமாா் ரூ.1 லட்சம் வரை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், டெபாசிட் பெற்று பல மாதங்கள் ஆன பிறகும் அந்த தனியாா் நிறுவனம் 20 பேருக்கும் வேலைக்கான உத்தரவை வழங்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளது.
இந்நிலையில் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டும் அந்நிறுவனம் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகக் கூறி 20 பேரும் வியாழக்கிழமை உடுமலை காவல் துறையில் புகாா் அளித்தனா். இது குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


