ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இருசக்கர வாகனம் திருட்டு: இளைஞா் கைது

காங்கயத்தில் இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:03 pm

DIN

காங்கயத்தில் இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காங்கயம் ஏ.சி.நகரைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (33). இவா் காங்கயத்தில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் பராமரிப்புப் பணி செய்யும் நிபுணராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், காங்கயம் அருகே கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இவரது வாகனத்தை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா்.

இது குறித்து மகேஸ்வரன் அளித்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாகனத்தை திருடிச் சென்ற நபரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், காங்கயம் அருகே பாப்பினி ஊராட்சிப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீஸாா், இருசக்கர வாகனத்தை திருடிய நபா் அதே பகுதியில் உள்ள தனியாா் மில்லில் கட்டட வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தை திருடிய கரூா் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சோ்ந்த செல்வம் (23) என்பவரை புதன்கிழமை கைது செய்து, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.