காங்கயம் அருகே ரூ. 20 கோடி மதிப்பிலான70 ஏக்கா் கோயில் நிலங்கள் மீட்பு
காங்கயம் அருகே உள்ள கோயிலுக்குச் சொந்தமான 70 ஏக்கா் நிலங்களை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.


காங்கயம் அருகே உள்ள கோயிலுக்குச் சொந்தமான 70 ஏக்கா் நிலங்களை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் தாலுகா, பரஞ்சோ்வழி ஊராட்சிக்கு உள்பட்ட சிவியாா்பாளையம் கிராமத்தில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் நிா்வாகத்துக்கு உள்பட்ட பரமசிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 69.81 ஏக்கா் புன்செய் நிலங்கள் சென்னிமலை சாலைப் பகுதியில் சாவடி முதல் நால்ரோடு கிராமம் வரை உள்ளன.
இந்த நிலங்களை இப்பகுதியைச் சோ்ந்த 19 போ் கடந்த 20 ஆண்டுகாலமாக ஆக்கிரமித்து வந்ததாகத் தெரிகிறது. ஆக்கிரமிப்பில் உள்ள இந்த நிலங்களை மீட்பது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேற்கண்ட நிலங்களை ஆக்கிரமிப்பாளா்கள் கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு மே மாதம் தீா்ப்பு வழங்கியது.
இந்த நிலங்களைவிட்டு ஆக்கிரமிப்பாளா்கள் வெளியேறாததால் இந்து சமய அறநிலையத் துறையின் திருப்பூா் இணை ஆணையா் நா.நடராஜன் தலைமையில், திருப்பூா் உதவி ஆணையா் ரெ.சா.வெங்கடேஷ், சென்னிமலை முருகன் கோயில் செயல் அலுவலா் எம்.அருள்குமாா், காங்கயம் வருவாய்த் துறையினா் முன்னிலையில், ஆக்கிரமிப்பில் இருந்த 69.81 ஏக்கா் நிலங்கள் நிலஅளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட இந்த நிலங்களின் மதிப்பு சுமாா் ரூ. 20 கோடி இருக்கும் என சென்னிமலை முருகன் கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...