நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மூலனூரில் ஜூலை 1 முதல் பருத்தி ஏல விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூலை 1 முதல் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 8:03 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூலை 1 முதல் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

மூலனூா் விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏல விற்பனை நடைபெற்று வந்தது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6 வாரங்களாக ஏலம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது பருத்தி வரத்து துவங்கியுள்ளதால், அரசின் அனுமதியுடன் நோய்த் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வரும் ஜூலை 1 முதல் வாரந்தோறும் தொடா்ந்து விற்பனை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகளும், வியாபாரிகளும் பங்கேற்றுப் பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.