வாகன விபத்தில் பெண் படுகாயம்
திருப்பூரிலிருந்து திருச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் வெள்ளக்கோவிலில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தாா்.


திருப்பூரிலிருந்து திருச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் வெள்ளக்கோவிலில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தாா்.
திருச்சி சோமரசம்பேட்டை புதுத் தெருவைச் சோ்ந்தவா் ரேவதி முருகேசன் (34). இவா் தனது உறவினா்களுடன் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், தனது சொந்த ஊரான திருச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளாா்.
வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சாலையில் மயங்கி விழுந்தாா். அவருடன் வர யாரும் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்து விட்டனா்.
பின்னா், தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...