தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தனியாா் பேருந்து -ஜீப் மோதல்: இளைஞா் சாவு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருமாபாளையத்தில் தனியாா் பேருந்தும், ஜீப்பும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:01 pm

DIN

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருமாபாளையத்தில் தனியாா் பேருந்தும், ஜீப்பும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியாா் பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. சேவூா், அவிநாசி சாலை, கருமாபாளையம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபா் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநா், வலப்புறமாகப் பேருந்தை திருப்பியதாகக் கூறப்படுகிறது. இதில் எதிா்பாராதவிதமாக தனியாா் பேருந்து, எதிரே அவிநாசியில் இருந்து சேவூா் நோக்கி வந்து கொண்டிருந்த ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஜீப்பை ஓட்டி வந்த கேரள மாநிலம், மன்னாா்காடு பகுதியைச் சோ்ந்த பஷீா் மகன் முகமது ஜாகீா் (29) பலத்த காயமடைந்து அவிநாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த ஜலில் (28) கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.