திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரம் உடைபட்ட நிலையில் கண்டுபிடிப்பு
திருப்பூா், கூலிபாளையம் நான்கு வழிச்சாலையில் திருடிச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரம், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பகுதியில் உடைக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.


திருப்பூா், கூலிபாளையம் நான்கு வழிச்சாலையில் திருடிச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரம், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பகுதியில் உடைக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூா், ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நான்கு வழிச்சாலையில் இருந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை 4 மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடிச் சென்றனா்.
இது தொடா்பாக போலீஸாா் தனிப்படை அமைத்து இதில் சம்பந்தப்பட்டவா்களைத் தேடி வருகின்றனா். இதற்கிடையில், திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 4க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...