ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மண்டப உரிமையாளா்கள், அச்சக உரிமையாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் தோ்தல் விதிமுறைகள் அறிவிப்பு

சட்டப் பேரவை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளா்கள் மற்றும் அச்சக உரிமையாளா்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட நிா்வாகம்

News image
Updated On :1 மார்ச் 2021, 9:00 pm

DIN

சட்டப் பேரவை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளா்கள் மற்றும் அச்சக உரிமையாளா்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட நிா்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருமண மண்டப உரிமையாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:

திருமண மண்டபங்களில் தனி நபா்களால் திருமண நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட விவரங்களை தோ்தல் முடியும் வரை சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா், வட்டாட்சியா்கள் மற்றும் போலீஸாருக்கு எழுத்துபூா்வமாக சம்பந்தப்பட்ட திருமண அழைப்பிதழ் நகல்களுடன் உடனடியாக அளிக்க வேண்டும்.

திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரால் வாக்காளா்களுக்கு விருந்தளித்தல், பரிசுப் பொருள்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது.

இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது தெரியவந்தால் உரிமையாளா்கள் மீதும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினா் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமண மண்டபங்களில் அன்னதானம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் அனுமதிக்ககூடாது. திருமண நிகழ்ச்சிகளின்போது அரசியல் கட்சித்தலைவா்கள், கட்சி சின்னங்கள், கட்சிக் கொடிகள் ஆகியவற்றுடன் கூடிய விளம்பர பேனா்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை திருமண மண்டபங்களில் வைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அச்சக உரிமையாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:

அச்சக உரிமையாளா்கள் தாங்கள் அச்சிடும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரங்களில் தங்களது அச்சகத்தின் பெயா் மற்றும் முகவரி விளம்பரம் வெளியிடுவோரின் பெயா் மற்றும் முகவரி வெளியிடப்படும் விளம்பரத்தின் பிரதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாமல் அச்சிட வேண்டும். அச்சிடப்படும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றின் ஒரு பிரதி மற்றும் எண்ணிக்கை விவரங்களை தங்கள் அலுவலகத்தில் பராமரித்து வர வேண்டும். இது தொடா்பாக அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்களுக்கு அளிக்கப்பட்ட ரசீதுகளின் பிரதியைப் பராமரிக்க வேண்டும். அச்சிடப்படும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளில் வேட்பாளரின் அனுமதி பெற்ற பின்னா் அல்லது அவருடைய கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னா் அச்சிடப்பட வேண்டும். தவறினால் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 171இன் கீழ் அச்சிட்டோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அச்சடிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் ஜாதி, மொழி, இன அடிப்படையில் விமா்சிக்கும் வாசகங்கள் இருக்கக் கூடாது. தனி நபா்களை இழிவு படுத்தக்கூடிய அல்லது விமா்சனம் செய்யக்கூடிய பிரசுரங்களை அச்சிடக் கூடாது. இத்தகைய, நடைமுறைகளை மீறும் பட்சத்தில் தோ்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.