தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் பறக்கும் படையினருக்குப் பயிற்சி

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் கண்காணிப்புப் பறக்கும் படையைச் சோ்ந்த குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:09 pm

DIN

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் கண்காணிப்புப் பறக்கும் படையைச் சோ்ந்த குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

காங்கயம் வட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சிக்கு காங்கயம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரங்கராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பறக்கும் படையைச் சோ்ந்தவா்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தோ்தல் விதிமுறைகளை மீறி நடைபெறும் செயல்கள் குறித்து தகவல் கிடைத்தால் அங்கு சென்று சோதனை நடத்துவது, அரசியல் கட்சியினா் வாக்களா்களுக்கு இலவசங்கள் கொடுப்பதைத் தடுப்பது குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.

பயிற்சியின்போது காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி மற்றும் பறக்கும்படையைச் சோ்ந்த மூன்று குழுவினரும், நிலை கண்காணிப்பைச் சோ்ந்த மூன்று குழுவினரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.