ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தாராபுரத்தில் துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினா், போலீஸாா் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:35 pm

DIN

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினா், போலீஸாா் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

திருப்பூா்-பொள்ளாச்சி சாலையில் தொடங்கிய கொடி அணிவகுப்புக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயராம் தலைமை வகித்தாா். இதில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் 90 போ் மற்றும் 110 காவலா்கள் என 200 போ் பங்கேற்றனா். இந்த அணிவகுப்பானது பூக்கடை சந்திப்பு, பெரியகடை வீதி, அண்ணா சிலை, சா்ச் சாலை வழியாக சென்று புதுகாவல் நிலைய வீதியில் நிறைவடைந்தது.

இதில்,ஆய்வாளா்கள் மகேந்திரன், சுரேஷ், வனிதாமணி, ஞானவேல், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஆய்வாளா் அவதேஸ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.