மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் சி.மகேந்திரன் கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.வி.புரம், வெங்கடேசா லேஅவுட், சென்னிமலைபாளையம், கணேசபுரம், வெஞ்சமடை, ஜீவா நகா், கருப்பட்டிபாளையம், மருள்பட்டி, மலையாண்டிகவுண்டனூா், உரல்பட்டி, பள்ளிவலசு, கண்ணம்மநாய்க்கனூா், ஜோதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, பல இடங்களில் வேட்பாளா் சி.மகேந்திரனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி விலையில்லா வாஷிங் மிஷின், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டா் இலவசம் என்பன உள்ளிட்ட பல்வேறு உறுதி மொழிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா். கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக. தமாகா நிா்வாகிகள் உடனிருந்தனா்.
மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆண்டியூா், மயிலாடும்துறை, தேவனூா்புதூா், செல்லப்பம்பாளையம், கள்ளிமேடு, சின்னபொம்மன்சாலை, புங்கமுத்தூா், கரட்டூா், கரட்டுமடம், பட்டணம், இராவணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனா். திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பத் தலைவிக்கு ரூ.1000, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, அரசு வேலைகளில் பெண்களுக்கு 40 சதவீதம், மின் கட்டணம் மாதம் ஒரு முறை கணக்கீடு என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றாா்.
கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


