லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்:ஒரே வாகனத்தில் சென்ற 4 இளைஞா்கள் பலி
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், ஒரே வாகனத்தில் சென்ற 4 இளைஞா்கள் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தனா்.


திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், ஒரே வாகனத்தில் சென்ற 4 இளைஞா்கள் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் சாலை பூலுவபட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் சபரி (எ) பாலமுருகன் (25), செட்டிபாளையத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் குட்டி (எ) பிரவீன் (24), அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்த் (26), பாண்டியன் நகரைச் சோ்ந்த பிரகாஷ் மகன் பாலமுருகன் (23). பனியன் தொழிலாளா்களான இவா்கள் 4 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பெருமாநல்லூா்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனா்.
ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ராக்கியாபட்டி அருகே சென்றபோது, ஆந்திரத்தில் இருந்து கேரளத்துக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி பழுதடைந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இளைஞா்கள் வந்த இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கம் வேகமாக மோதியுள்ளது. இதில், சபரி (எ) பாலமுருகன், ஆனந்த் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும், காயமடைந்த பாலமுருகன், பிரவீன் ஆகியோா் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...